முகப்பு

வானிலை முன்னறிவிப்பு

  1. பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
  2. இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பு
  3. நகரங்கள் பற்றிய எதிர்வுகூறல்

2024  ஜூலை 01ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2024 ஜூன் 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2024 ஜூன் 30ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு, காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை:

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு, காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

பிரதானநகரங்களுக்கானவானிலைமுன்னறிவித்தல்                                                               

திகதி :

2024-07-02

நகரம்

வெப்பநிலை (0C)

சாரீரப்பதன் (%)

வானிலை

உச்ச

குறைந்த

உச்ச

குறைந்த

அனுராதபுரம்

35

26

90

65

பிரதானமாகசீரானவானிலை

மட்டக்களப்பு

33

27

90

65

பி.. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழை பெய்யும்சாத்தியம்

கொழும்பு

31

26

95

75

அவ்வப்போதுமழைபெய்யும்

காலி

30

26

90

80

அவ்வப்போதுமழைபெய்யும்

யாழ்ப்பாணம்

32

28

90

75

பிரதானமாகசீரானவானிலை

கண்டி

29

23

95

75

அடிக்கடிமழைபெய்யும்

நுவரெலியா

20

15

95

80

அடிக்கடிமழைபெய்யும்

இரத்தினபுரி

31

23

95

80

அவ்வப்போதுமழைபெய்யும்

திருகோணமலை

35

26

90

60

பிரதானமாகசீரானவானிலை

மன்னார்

31

28

90

80

பிரதானமாகசீரானவானிலை



Satellite Images

 


Courtesy of Himawari Satellite

Last 24 hours

max temperature
Max. Temperature 37.3°C
Pottuvil
min temperature
Min. Temperature 15.4°C
Nuwara Eliya
max rain
Max. Rainfall 38.9mm
Moraliya Oya (Kegalle)

Find us on

 

 

 

Online Service

Providing Meteorological data and information online

(metdpa@meteo.gov.lk)

Weather and Climate Data