அறிக்கை இல : 01 WW/O/23/09/03/01
நிறம் :ஆம்பர்
கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பான ஆலோசனை
இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால்,
2023செப்டம்பர்04ஆம் திகதி முற்பகல் 09.30மணிவரை செல்லுபடியாகும் வகையில்
2023செப்டம்பர் 03ஆம்திகதிமுற்பகல் 09.30மணியில் வெளியிடப்பட்டது.
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்கு:
தயவுசெய்து அவதானமாக இருக்கவும்!
இயங்குநிலை தென்மேற்குபருவப்பெயர்ச்சி நிலைமைகாரணமாக ஹம்பாந்தோட்டையிலிருந்துபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும்புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும்காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும்காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
புத்தளத்திலிருந்துகொழும்புமற்றும்காலிஊடாகஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்டகடற்பரப்புகளில்கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகஅவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.